Tuesday, November 26, 2013
Sunday, November 24, 2013
மோடியும் காதலியும்
அன்பும்
கருணையும் பற்றி சதா பேசுகிறவர்கள் மற்றவர்களை வதைப்பதில் அதீத விருப்பம் கொண்டிருப்பார்கள்.
பிரம்மச்சாரிகளும் இப்படித் தான் – மனம் முழுக்க காமத்தால் நிரம்பி இருக்கும். சட்டசபையில்
போர்னோ பார்ப்பதாகட்டும், மனநலமில்லாத பெண்ணை கற்பழிப்பதாகட்டும் காவிப்படையினர் நிபுணர்களாக
இருக்கிறார்கள். ஆனால் குஜராத்தில் அப்பாவி சிறுபான்மையினரை படுகொலை செய்யத் தூண்டிய,
அவ்வன்முறையாளர்களை இந்நாள் வரை பாதுகாத்து வரும் மோடி ஒரு குரூரமான கொலையாளி என்கிற
சித்திரமே நமக்குள் இருக்கிறது. இன்னொரு புறம் அவர் அத்வானியை வெளியேற்றிய விதம் அவர்
எந்தளவுக்கு தயக்கமற்ற அதிகார வெறியர் என்பதையும் காட்டியது. இதோடெல்லாம் ஒப்பிடுகையில்
பங்களூர் இளம்பெண்ணை அவர் போலீஸைக் கொண்டு பின் தொடர்ந்தது, தொலைபேசியை ஒட்டுக் கேட்டது
போன்றவை சிறு குற்றங்கள் தாம்.
Tuesday, November 19, 2013
ஒரு மலைப்பிரசங்கத்துக்கான குறிப்புகள் -- நின் ஆண்டிரூவ்ஸ்
- அல்குல்கள் கடவுள்கள் அல்ல. அவை படைக்கப்பட்டவை.
- கடவுளைப் போலல்லாது அவை நித்தியமானவை அல்ல.
- கண்ணியமாய், கம்பீரமாய், புத்திசாலித்தனமாய் உள்ள அவற்றை நாம் எப்படியும் கவனத்தில் கொள்ளத் தான் வேண்டும்.
- எல்லா ஆன்மீக தோற்றங்களையும் போல அல்குல்களும் ஒரு நாளில் எப்போது வேண்டுமெனிலும் மனிதக் கண்ணால் காணக் கூடியவை அல்ல.
- அல்குல்கள் கண்ணுக்கு புலப்படுபவை, புலப்படாதவை, புனிதமானவை, பங்கமானவை என இரண்டையும் பிரநுத்துவப்படுத்துகின்றன.
- அவை ஒரே நேரத்தில் எங்கும் தோன்றுவதில்லை, எங்கும் தோன்றுகின்றன. அந்தரங்கமானவையாகவும் பொதுவானவையாகவும், மனிதனாகவும் இறையாகவும் உள்ளன.
Thursday, November 14, 2013
ரஜினி எனும் தொன்மமும் இந்திய குடும்பமும்
ஒவ்வொரு
சினிமா நட்சத்திரமும் ஒரு தொன்மம் எனும் போது ரஜினி தான் நம் சமூகத்தின் ஆக சுவாரஸ்யமான
தொன்மம். ஒரு புனைவு. அவரது எல்லா சிறந்த படங்கள் மெல்ல மெல்ல கூடுதலாக பல வர்ணங்களை
இந்த புனைவில் சேர்த்து விட்டு செல்லுகின்றன என நமக்குத் தெரியும். அவரது ஆன்மீகம்,
விட்டேத்தி மனோபாவம், வாழ்வில் ஒட்டாமை, பணிவு, எளிமை, முதிர்ச்சி இவையும் சேர்த்து
தான். இத்தொன்மத்தில் நிஜத்தில் நாம் அறிந்த ரஜினியும் சினிமா ரஜினியும் பிரித்தறிய
முடியாதபடி ஒரு இலையின் இரு பக்கங்களாகி வெகுநாட்களாகி விட்டன.
Tuesday, November 12, 2013
தி ஹிந்துவில் எனது கட்டுரை
Saturday, November 9, 2013
திருடப்பட்ட தேசம்
பொதுவாக சூழலியல் கட்டுரைகள் அலுப்பாக இருக்கும். வெறும் தகவல்கோர்வையாக
அல்லது வியப்பூட்டும் செய்திகளை ஆச்சரியக்குறிகளால் நிறைத்து மூச்சு முட்ட வைக்கும்.
ஆனால் நக்கீரன் “பூவுலகு”, கொம்பு, “வலசை” போன்ற சிறுபத்திரிகைகளில் எழுதின கட்டுரைகளின்
தொகுப்பான “திருடப்பட்ட தேசம்” மிகவும் வாசிக்கத்தக்க தகவல்பூர்வமான சரியான அணுகுமுறை
கொண்ட நூல். ஒரு சூழலியல் ஆர்வலருக்கு அரசியலும் தெரியும் போது தான் இத்தகைய விரிவான
பார்வை கொண்ட எழுத்து சாத்தியமாகும்.
Tuesday, November 5, 2013
சமூகம் எனும் நான்கு குருடர்களும் ஊனம் எனும் யானையும்
உச்சநீதிமன்றம்
ஊனமுற்றோருக்கான 3% இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும் என கேட்டுள்ளது. அதுவும் போட்டியிடுவோரில்
3% என பார்க்க வேண்டுமே அன்றி தேர்ந்தெடுத்தோரில் மூன்று சதவீதம் என பார்க்கக் கூடாது
என்றுள்ளது. இது ஒரு முக்கிய அவதானிப்பு. தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஊனமுற்றோர் இருக்க
வேண்டும் எனும் அவசியமே இல்லையே! ஊனமுற்றோரை தேர்ந்தெடுக்காமல் இருக்க அரசும் அதிகாரிகளும்
இப்படி பல தந்திரங்களை மேற்கொள்ளுகிறது. அரசைப் பொறுத்தவரையில் ஊனமுற்றோர் ஒரு ஓட்டுவங்கி
அல்ல. அதிகாரிகளுக்கு ஊனமுற்றோர் குறித்த முன்தீர்மானங்கள் பல தடையாக உள்ளன. இன்னொரு
பக்கம் சமூகத்தில் இடஒதுக்கீடு குறித்த அதிருப்திகள் ஊனமுற்றோர் சமவாய்ப்பை பெறுவதற்கும்
தடையாக உள்ளன. ஒவ்வொன்றாக பார்ப்போம்.
Sunday, November 3, 2013
பணம் தானே எல்லாமே!
ஒருவழியாய்
இந்தியா ஆஸ்திரேலியா போட்டித் தொடர் முடிந்து விட்டது. ஒவ்வொரு போட்டி முடிவிலும் தோனி
அதே புகாரை தான் வாசித்தார். தோற்றாலும் பெய்லி ரொம்ப ஏமாற்றம் இல்லாமல் எளிதாக எடுத்துக்
கொண்டார். தோனி எப்போதும் அப்படித் தான் என்பதால் தனியாக தெரியவில்லை. ஆனால் வெற்றி
தோல்விகளுக்கு கிட்டத்தட்ட மதிப்பே இல்லாமல் போன ஒரு தொடர் என இதை சொல்ல வேண்டும்.
எதிரணி 350 அடித்தாலும் அவ்வளவு தானே எனும் அசட்டை. இந்திய அணி முதலில் 350 அடித்தால்
இவ்வளவு தானா எனும் பயம். யார் ஜெயித்தாலும் இவ்வளவு பிரம்மாண்டமான ஸ்கோர்களை அடித்ததில்
பரஸ்பர திருப்தி. எல்லைக் கோட்டுக்கு வெளியே நாற்காலிகளில் இருக்கும் வீச்சாளர்களின்
முகங்களில் மட்டும் கலக்கம்.
கிரிக்கெட்டின் புது காலனியாதிக்கமும் சாதக பாதகங்களும்
சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா
தொடர்ந்து இரு டெஸ்டு தொடர்களை மிக அசிங்கமாக இழந்ததற்கும் இந்தியா அது போன்றே ஆஸ்திரேலியா,
இங்கிலாந்து மண்ணில் செய்ததற்கும் வேறுபாடு உண்டு. இந்தியா ஓய்வு பெறும் மனநிலையில்
இருந்த தள்ளாட்ட வீரர்களை விடாப்பிடியாய் தக்க வைத்து அதை செய்தது. ஆனால் தவறை திருத்தியதும்
இந்தியாவின் ஆட்டநிலையில் பெரும் முன்னேற்றம் புலப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா மூத்த
வீரர்களை இழந்து, இருக்கிற இளைய வீரர்களில் யாரையெல்லாமோ முயன்று பார்த்தும் மிக மட்டமாக
தோற்று வருகிறது.
Subscribe to:
Posts (Atom)